வியாழன், 23 ஆகஸ்ட், 2018

​சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! August 23, 2018

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதுக்குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும், கோவில்களுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் சிலை பாதுகாப்பு அறைகளில் இருந்து சிலைகள் சுலபமாக திருடப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். இது குறித்து செப்டம்பர் 7ம் தேதி பதிலளிக்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது

Image