புதன், 22 ஆகஸ்ட், 2018

சென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு August 21, 2018

Image
பார்சல் வாங்க வீட்டில் இருந்து பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு பில் தொகையில் 5% தள்ளுபடி செய்யப்படும் என சென்னை ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பு பலதரப்பட்ட மக்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக அன்றாட வாழ்வோடு இணைந்த பிளாஸ்டிக்கை புறக்கணித்து வாழ்வதும் சிரமம் தான் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னை உணவகங்களில் பார்சல் வாங்க பாத்திரங்களை வாடிக்கையாளர்களே கொண்டு வந்தால் 5% தள்ளுபடி என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

பாத்திரங்களை வீட்டில் இருந்து கொண்டு வருவது சற்று சிரமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் சுற்றுச்சூழல் அக்கறையோடு கொண்டு வர மக்கள் முன்வர வேண்டும் என தெரிவிக்கும் சென்னை ஹோட்டல்கள் சங்கத்தினர், பிளாஸ்டிக் கொண்டு பார்சல் செய்வதற்கு பதிலாக பாக்கு மட்டை, கரும்பு சக்கை கொண்டு மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

55 மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மண்வளம் காக்க தள்ளுபடியுடன் கூடிய இது போன்ற முயற்சிகள் வரவேற்ககூடியதே.