இன்றைய காலத்தில் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால், கண் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது.
செல்போன்களில் இருந்து வெளியேறும் Blue Light கண் பார்வையை மிகவும் பாதிப்படையச்செய்யும். சரியான உணவு முறைகள் மட்டுமல்லாமல், கண்களுக்கு தினமும் சில சிறிய பயிற்சியை மேற்கொண்டால் கண் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கண்களை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்யவேண்டிய பயிற்சிகள்:
1. இரண்டு உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாக தேய்த்து, சிறிது சூடான பின்னர், அதனை கண்களில் வைத்து மெல்லிய அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை 5 முறை செய்தால், கண் பிரச்சனைகளில் இருந்து காக்கலாம். மேலும், கண் பார்வை அதிகரிக்க இந்த பயிற்சி உதவுகிறது.
2. கண்களை சுழற்றுவது மிகவும் உதவியானதாக அமையும். சிறிது நேரம் கண்களை ஒரு திசையில் சுழற்ற வேண்டும். பின்னர் மறு திசையில் சுழற்றவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கண் பார்வை அதிகரிக்கும்.
3. சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை பார்க்க வேண்டும். பின்னர், உங்களது விரலை கண் முன்னே வைத்து, அந்த பொருளையும், விரலையும் மாறி மாறி பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வது, கண் தசைகளுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும். இதனை 5 முறை செய்ய வேண்டும்.
4. ஒரு இடத்தில் அமர்ந்து, 2 நொடிகள் கண்களை மூடி, பின்னர் திறக்க வேண்டும். இதனை 5 முறை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், கண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
5. ஒவ்வொரு 20 நிமிட இடைவேளையில், 20 அடி தள்ளி இருக்கும் பொருளை 20 நொடிகள் பார்த்தால், கண்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.