முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன கவுசர் என்னும் போர் விமானத்தை ஈரான் சோதனை செய்துள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள்.
இந்நிலையில், ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை விற்பனை செய்ய மறுத்தன. இதனால் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க உள்நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க ஈரான் திட்டமிட்டது.
பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் மீது ஈரான் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு முன்னர் கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற புரட்சிக்கு முன்னர் ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட போர் விமானங்களைதான் ஈரான் பயன்படுத்தி வருகிறது.
ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவின் கண்ணில் மன்னை தூவி, ஈரான் நேற்று உள்நாட்டு தயாரிப்பான கவுசர் போர் விமானத்தை சோதனை செய்துள்ளது.