புதன், 15 ஆகஸ்ட், 2018

​உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்களா? August 10, 2018

Image

அதிக நேரம் செல்போன் திரையை பார்க்கும் குழந்தைகளின் பார்வைத்திறன் குறித்து சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது American Academy of Ophthalmology.

கண் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் கண்களில் ஏற்படுகிற மாற்றங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில், செல்போன்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் கண்கள் எளிதில் வறட்சி அடைவதாகவும் அதிக சோர்வடைவதாகவும் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மையோபியா என்று அழைக்கப்படும் கிட்டப்பார்வை நோய்க்கு ஆளாகிறார்கள் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

1971ம் ஆண்டிலிருந்து தற்பொழுது வரை கணக்கெடுத்து பார்த்ததில் 90 சதவிகிதம் பேர் கிட்டப்பார்வை நோயால் அவதிப்படுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அதிக நேரம் கணினி பயன்படுத்துபவர்களும், செபோன் பயன்படுத்துபவர்களும் மட்டுமே இதுபோன்ற கண் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள் 

கண் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த, குழந்தைப்பருவத்தில் இருந்தே வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்பதற்காக பெற்றோர்களுக்கு ஆலோசனை கொடுத்து வருகிறார்கள் American Academy of Ophthalmology ஆராய்ச்சியாளர்கள்.