வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மீண்டெழுகிறது கடவுளின் தேசம் : முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர். August 23, 2018

Image

கேரள மாநிலத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய பேய்மழை ஓய்ந்ததை தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

வரலாறு காணாத பருவமழையால் கேரள மாநிலம் சின்னாபின்னமானது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால், பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் முற்றிலும் உருக்குலைந்தன. இந்நிலையில், மழை ஓய்ந்து கேரள மாநிலத்தில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான இடங்களில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள், வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்களை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கனமழையால் கொச்சி விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால், வரும் 26ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 29ம் தேதி தான், விமான நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஒருசில இடங்கள் இன்னும் கனமழையின் கோரத்தாண்டவத்தின் பிடியில் இருந்து மீளவில்லை. மூணாறு பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த 700 கோடி ரூபாய் நிதியை பெறுவது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகள் இடையே கருத்து மோதல் எழுந்தது. இது தொடர்பாக திருவனந்தரபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் வழங்க கூடிய நிதியுதவிகளை பெறலாம் என, 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே, கேரள வெள்ள நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி வாங்க அனுமதிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது பின்பற்றப்படும் பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, உள்நாட்டின் தீவிர முயற்சியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதியத்துக்கு வழங்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு அறக்கட்டளைகளின் நிதியுதவிகள் வரவேற்கப்படுகின்றன என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு உரிய தகவல்களை தெரிவிக்காமல் 34 அணைகளில் இருந்தும் தண்ணீரை திறந்துவிட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இது இயற்கை பேரிடர் இல்லை எனவும், மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.