ஸ்மார்ட்போனை கழிவறை உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதால் எத்தகைய ஆபத்துகள் உருவாகும் என்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.
காலையில் கண் வழிப்பது தொடங்கி, இரவு உறங்கும் முன்பு வரை ஒரு நாள் பொழுது என்பது சிலருக்கு செல்போனில் தொடங்கி செல்போனில் முடிகிறது.
அதுவும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தான் உடலின் ஒரு உறுப்பு போல செல்போனை பயன்படுத்துகிறார்கள். கழிப்பறைகளில் இருக்கும் கிருமிகளை விட 3 மடங்கு அதிகமான கிருமிகள் ஸ்மார்ட்போன் ஸ்கிரினில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதன் மூலம் சறும நோய்கள் தொடங்கி பல நோய்கள் உருவாவததாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மேலும் பல வகையான நோய்களுக்கான எண்ட்ரி பாசே ஸ்மார்ட்போணில் உள்ள டச்ஸ்கிரினில் தான் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பலரால் பயன்படுத்தப்படும் மேசைகள், கம்ப்யூட்டர்கள் ,கீபோர்டு மற்றும் மவுசில் அதிக கிருமிகள் இருப்பது வழக்கம். அதை விட அதிகமாக தனி நபரால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள் இருப்பதாக சொல்கிறது அந்த ஆய்வு.
மேலும் செல்போனை கழிப்பறை தொடங்கி அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் போது ஸ்மார்ட்போண் ஸ்கிரினில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செல்போணை கழிப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதே தவறு என சுட்டிக்காட்டும் அந்த ஆய்வு கழிப்பறைகளில் உள்ள கிருமிகள் எளிதில் செல்போணில் ஒற்றிக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது. அதனால் கழிப்பறைக்கு செல்லும் போது ஆண்கள் தங்கள் சட்டப்பையில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது கூட தவறு என்றும் வலியுறுத்தப்படுகிறது.
பெரும்பாலானோர் போன் வாங்கிய பிறகு அதனை சுத்தம் செய்வதே இல்லை. செல்போன் பழுதானால் அதனை சர்வீசுக்கு அனுப்பும் போது தான் அது சுத்தம் செய்யப்படுகிறது. அதனால் தான் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளை விட அதிக கிருமிகள் நம் செல்போனில் இருப்பதாகவும் சுட்டிக்காண்பிக்கின்றன ஆய்வாளர்கள்.
பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் கொடுத்து வாங்கும் எத்தகைய மாடல் போனாக இருந்தாலும் கிருமிகள் ஸ்கிரீனில் தேங்குவது என்பது அனைத்து போன்களிலும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பதாக பல வகையான செல்போன் மாடல்களில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு கூறுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள ஆன் - ஆஃப் பட்டன் , ஹோம் ஸ்கிரீன் ஆகியவற்றில் அதிகளவில் கிருமிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வாரம் ஒரு முறையாவது செல்போனை சுத்தம் செய்வது தான் கிருமிகள் தேக்கத்தை குறைக்க ஒரே வழி. ஆகையால் இந்த செய்தியை பார்க்கும் நீங்கள் உடனடியாக உங்கள் செல்போனை சுத்தம் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம்.