
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கரையோர கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வடக்கு கரையோர கிராமங்களான கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்