புதன், 24 ஜூலை, 2019

காஷ்மீர் ஆப்பிள்களுடன் போட்டி போடும் கொடைக்கானல் ஆப்பிள்...! July 24, 2019

ns7.tv
Image
தமிழகத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகளில் ஒன்று கொடைக்கானல், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இந்த இயற்கை அரசியின் மடியில் இப்போது என்ன சிறப்பு?
காஷ்மீர் இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது அனைவரது நினைவுக்கு வருவது ஆப்பிள். ஆனால் காஷ்மீரில் உற்பத்தியாகும் ஆப்பிள்களின் சுவைக்கு இணையானது கொடைக்கானலில் விளையும் ஆப்பிள்கள். அதே ருசி, அதே பளபளப்பு என காஷ்மீர் ஆப்பிள்களோடு போட்டி போடுகிறது கொடைக்கானல் ஆப்பிள். ஜூன் மாதம் தொடங்கும் ஆப்பிள் விளைச்சல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.                          
கொடைக்கானலில் எல்லா பகுதிகளிலும் இந்த ஆப்பிள்கள் விளைவது இல்லை. மேல் மலை என சொல்லப்படும் வடகவுஞ்சி தொடங்கி கிளாவரை வரையிலான பகுதியில் மட்டுமே ஆப்பிள்கள் விளையும். இந்த பகுதியில் 67 ஏக்கரில் சுமார் 400 மரங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. 
கடல் மட்டத்திலிருந்து 2580 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் உற்பத்தியாவாதால் இதன் GENETICAL தன்மையில் எந்த மாறுபாடும் இல்லை. இந்த வகை ஆப்பிள்கள் கோடை ஆப்பிள்கள் என்றே அழைக்கப்படுகின்றன. சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறம் கலந்து உள்ளது. வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாலும், உள்ளூர் சந்தையிலும் அதிக தேவை இருப்பதாலும் விலை அதிகம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்கின்றனர்.
கொடைக்கானலுக்கு செல்வோர் இனி பாறைகளையும், மலைகளையும், பனியையும் மட்டும் பார்த்து விட்டு வராமல் இந்த ஆப்பிள்களை பார்த்து விட்டு வர வேண்டும். அப்படியே ஆப்பிள்களை வாங்கி விட்டு வந்தால் அவர்களும் மகிழ்வார்கள், விவசாயிகள் வாழ்வும் செழிக்கும்.