துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ம் தேதி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து காயம் அடைந்தவர்களை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தன் ஆதரவாளர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது நாராயணபூர் என்ற பகுதியில் பிரியங்கா காந்தி சென்ற காரை, மாவட்ட நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அத்துமீறி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
credit ns7.tv