ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, சமஸ்கிருதம், ஹிந்தியை தவிர பிற மொழிகளை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார். உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்ட அவர், உணவு தரக்கூடிய விளைநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் பெட்ரோலை உணவாக உண்ண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்
credit ns7.tv