செவ்வாய், 30 ஜூலை, 2019

மத்திய அரசால் எதற்காக கொண்டுவரப்படுகிறது அணைப்பாதுகாப்பு சட்டம்...? July 30, 2019


இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க மத்திய அரசு அணைப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அணைப்பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு சொந்தமான அணைகளின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
dam 1

இந்தியா முழுக்க 5264 பெரிய அணைகள் உள்ளன. இதில் 293 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை. 1,041 அணைகள் 50 ஆண்டுகள் பழமையானவை. மேலும் 437 அணைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் காலங்களில் அணை உடைந்தால் உயிரிழப்பு, இயற்கை  சேதாரங்கள் உள்ளிட்ட இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன . இதனைத் தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் அணைப்பாதுகாப்பு சட்டம். 
இந்தியாவில் 1950 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய நீர் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும், அணைகளை ஆய்வு செய்வது, அணைகளின்  செயல்பாட்டை கண்காணிப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது ஆகியவற்றுக்காகவும்  இந்த அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க தற்போதைய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  
credit ns7.tv