ஞாயிறு, 21 ஜூலை, 2019

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு! July 21, 2019

Image
வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
கேரளா - கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்று வருவதால், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நெல்லை ஆகிய தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை, சின்னக்கல்லாரில் 9 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை, சோலையாறில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவானது. 
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

credit ns7.tv