புதன், 24 ஜூலை, 2019

தமிழகத்தில் முதன்முறையாக மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி! July 24, 2019

Image
மின்சார கார் தயாரிப்பை சென்னையில் தொடங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது தமிழக அரசு-ஹூண்டாய் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10  லட்சம் மின்சார கார்களை தயாரிக்க  ஹூண்டாய்  திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஒரு மின்சார காரின் விலை 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. கார் புறப்பட்ட 10 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.  ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் பயணிக்கலாம். வீட்டில் பயன்படுத்தும் மின்சாரம் முழுமையாக சார்ஜ் செய்ய 19 மணி நேரம் ஆகும். நேரடி மின்சாரம் எனில் 6 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். 
சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது