என்ஐஏ சட்ட விவகாரத்தில், திமுகவின் நிலைபாட்டில் இருந்து மாறுபடுவதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலையில் தமிழக அரசுடன் சேர்ந்து, ஆளுனர் நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அரசியல் சட்டத்தை ஆளுநர் முழுமையாக படித்தவர் இல்லை என்றும், அதன் காரணமாகவே போட்டி சர்க்கார் நடத்துவதாகவும், வைகோ தெரிவித்தார். நெக்ஸ்ட் தேர்வு தமிழர்கள் தலையில் மேலும் ஓர் இடி, என குறிப்பிட்ட வைகோ, என்ஐஏ சட்ட விவகாரத்தில் திமுகவின் நிலைபாட்டில் தனக்கு உடன்பாடில்லை, என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv