வியாழன், 25 ஜூலை, 2019

இந்தியாவில் வாகன விபத்துக்களால் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் மரணம்...! - அதிர்ச்சி ரிப்போர்ட்... July 25, 2019

credit ns7.tv
Image
இந்தியாவில் வாகன விபத்துக்களால் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும், இந்திய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதனை சீரமைப்பது மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் இறப்பதாகவும் 2017ம் ஆண்டு மட்டும் 1.5 லட்சம் மக்கள் சாலை விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். சாலை விபத்துக்கள் ஏற்படுவதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது எனவும் அங்கு 2017ம் ஆண்டில் மட்டும் 20,124 மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16,157 மக்கள் உயிரிழக்கின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்கள் வகிக்கிறது என 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 
சாலை கட்டமைப்பு முறையாக இல்லாததுதான் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு காரணமா என மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ளும் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.