புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கும் சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆறு வயதில் இருந்து மூன்றாவதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு முரணான அம்சங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, சமூக நீதிக்கு புறம்பாக உள்ள புதிய கல்விக் கொள்கையை, உடனடியாக, திரும்பப் பெற வேண்டும் என கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7.tv