நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் மிக பிரதானமாக சேர்க்கப்படுவது தக்காளி. குறைவான விலையாக இருந்தாலும், தக்காளி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களோ மிக அதிகம்.
உப்பு சேர்க்காத தக்காளி சாறு குடிப்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும், இளைஞர்களுக்கு இதய கோளாறு ஏற்படாமல் தடுக்கும். ஜப்பான் நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் தக்காளி சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு சத்து குறைவதும் தெரியவந்துள்ளது.

தக்காளியில் நம் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் சி சத்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் இருப்பதால், நம் கண்கள் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், தக்காளியை தினமும் நம் உணவில் எடுத்துக்கொண்டால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படாது எனவும் Skin Cancer நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளி சாப்பிட்டால், கேன்சர் கட்டிகள் வளர்வது 50 சதவீதம் குறைகிறது எனவும் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள Ohio State University நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பல சத்துக்கள் நிறைந்த தக்காளியை முடிந்த அளவு தினமும் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வைப் பெறுங்கள்.
credit ns7.tv