வியாழன், 25 ஜூலை, 2019

சென்னை மாநில கல்லூரியில் போராட்டம் நடத்துவதற்காக துண்டு பிரசுரங்களை கொண்டு வந்த முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Image
சென்னை மாநில கல்லூரியில் போராட்டம் நடத்துவதற்காக துண்டு பிரசுரங்களை கொண்டு வந்த முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநிலக்கல்லூரியில் போராட்டம் நடைபெற போவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு  குவிக்கப்பட்டிருந்தனர். சோதனைக்கு பிறகே கல்லூரிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 
கையில், துண்டு பிரசுரங்களுடன் வந்த மாணவர்கள் இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்த துண்டு பிரசுரங்களைப் பிடுங்கினர். அப்போது, கல்லூரியினுள் செல்ல முயன்ற மாணவர்களை, அங்கிருந்த, ஆசிரியர்கள், கல்லூரியிலிருந்து வெளியேற்றி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால், மாநில கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
credit ns7.tv