புதன், 17 ஜூலை, 2019

கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! July 17, 2019

Image
கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 18ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. 
நாளை முதல் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மழையின் போது 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது.
கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

credit ns7.tv