சனி, 20 ஜூலை, 2019

ஷீலா தீட்சித் காலமானார் : அரசியல் தலைவர்கள் இரங்கல்! July 20, 2019

காலமானார். அவருக்கு வயது 81.
தய நோயால் பாதிக்கப்பட்ட ஷீலா தீட்சித், வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரற்ற இதய துடிப்பு காரணமாக, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று அவர் காலமானார். 
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஷீலா தீட்சித்தின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில், கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் ஷீலா தீட்சித்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, தொடர்ச்சியாக 3 முறை டெல்லி முதல்வராக பணியாற்றினார்.  கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் ஷீலா தீட்சித் பணியாற்றினார். 
டெல்லியின் வளர்ச்சிக்காக ஷீலா தீட்சித்தின் பங்களிப்பு முக்கியமானவை என்றும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 
ஷீலா தீட்சித்தின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவர் காங்கிரஸ் கட்சியின் அன்பு மகள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  


credit ns7.tv