ஞாயிறு, 28 ஜூலை, 2019

வாழைப்பழத்திற்கும் GST வரி விதித்த ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்..! July 28, 2019

Image
2 வாழைப்பழங்களுக்கு 67 ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலித்த விவகாரத்தில், சண்டிகரில் உள்ள JW Marriott நட்சத்திர ஹோட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ், தமிழில் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு ஒன்றிற்காக சண்டிகர் சென்றிருந்த அவர், அங்குள்ள  நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அப்போது சாப்பிட இரண்டு வாழைப்பழம் கேட்ட ராகுல் போசுக்கு அதிர்ச்சியாக  2 வாழைப் பழத்தின் விலை 375 ரூபாய் என்றும், ஜிஎஸ்டி வரி 67 ரூபாயை சேர்த்து மொத்தம் 442 ரூபாய் 50 பைசா அவரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், ஹோட்டல் நிர்வாகத்தின் கட்டண ரசீதை கிண்டல் செய்யும் விதமாக, சமூக வலைதளத்தில் பதிவிட்ட, வீடியோ வைரலானது. 
இதைத்தொடர்ந்து ‘விளக்கம் அளிக்கக்கோரி ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சண்டிகர் வணிகவரித்துறை, ஜி.எஸ்.டி. சட்டத்தில் 
11-வது பிரிவை மீறியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வித்தித்துள்ளது. மேலும், பழங்கள் வரியில்லா வகையில் வரும் நிலையில், 2 வாழைப் பழங்களுக்கு எதற்காக 67 ரூபாய் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது என்றும் வணிக வரித்துறை நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதால், மும்பை தாஜ் ஹோட்டல் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

credit ns7.tv