கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் மூன்று அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏழாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோன்று கபினி அணைக்கு வரும் ஏழாயிம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், மூன்று அடி உயர்ந்து 42.14 அடியாக உள்ளது.
93 டி.எம்.சி. நீர் இருப்பு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 13.2 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஏழாயிரத்து 257 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
credit ns7.tv