சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பெரிய பெரிய மரங்கள் வெட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சேலம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கட்டிட சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மற்றும் திருமண மண்டபத்தை அகற்றி புதிய வணிக வளாக கட்டுவதற்காக இருபதுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 2வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
credit ns7.tv