புதன், 24 ஜூலை, 2019

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து வரும் ஆந்திரா! July 24, 2019

Image
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் உயரம், 22 அடியிலிருந்து 40 அடியாக உயர்த்தப்பட்டு வருவது, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
பாலாறு கிராமத்தில் கங்குந்தி தடுப்பணை உள்ளது. இந்த அணை முதலில் ஏழரை அடி உயரம் கொண்டதாக கட்டப்பட்டது. பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நேரம், அதன் உயரம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. 
தற்போது வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அணையின் உயரத்தை  40 அடியாக அதிகரிக்கும் வேலைகள், கடந்த 15 நாட்களாக சத்தமின்றி நடைபெற்று வருகிறது. அதேநேரம், நீர்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக ஆந்திர அரசு 43 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதை கண்டுகொள்ளாத ஆந்திர அரசு, அணையின் உயரத்தை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளது. இதன் மூலம் பாலாற்றிலிருந்து இனி ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

creddit ns7.tv