சனி, 20 ஜூலை, 2019

திரவ சோப்பு, எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலப்பட பால்; அதிர்ச்சியில் மக்கள்! July 20, 2019

Image
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் சம்பல் எனும் பகுதியில் நச்சுத்தன்மை வாய்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு செயற்கை பால் தயாரித்து விற்பனை செய்து வந்த மூன்று தொழிற்சாலைகளிலைச் சேர்ந்த 57பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
மத்திய பிரதேசம், குவாலியர்-சம்பல் பகுதியில் பிரபல நிறுவனங்களின் போலி முத்திரைகள் குத்தப்பட்டு நச்சுத்தன்மை மிக்க செயற்கை பால் விற்பனை செய்யப்பட்டு வந்ததுள்ளது. இந்த செயற்கைப்பால் மத்திய பிரதேசம் மட்டுமின்றி உத்திர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்த சிறப்பு தனிப்படை அதிகாரி, 3 தொழிற்சாலைகளில் 10,000 லிட்டர் கலப்பட பால், 500 கிலோவுக்கும் மேற்பட்ட கலப்பட பால்கோவா மற்றும் 200 கிலோ கலப்பட பன்னீர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 20 டேங்கர்கள், 11 பிக் -அப் வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
மேலும் திரவ சோப்பு, எண்ணெய், வெள்ளை பெயிண்ட் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை அப்பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பாலில் 30 சதவீதம் மட்டும் பால் சேர்த்து பின் திரவ சோப்பு, எண்ணெய், வெள்ளை பெயிண்ட் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை கலந்து கலப்பட பாலை தயாரித்து வந்துள்ளனர்.
இந்த கலப்பட பால் கம்பெனிகள் விடுமுறையின்றி வாரம் 7 நாட்களும் 24 மணிநேரமும் செயல்பட்டு, இந்தியாவிலுள்ள முக்கிய சந்தைகள் அனைத்திற்கும் இந்த கலப்பட பால் விற்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் கலப்பட பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கலப்பட பாலின் தயாரிப்பு செலவு லிட்டருக்கு ரூ. 5 ஆனால், இது முக்கிய சந்தைகளுக்கு லிட்டர் 45ரூ முதல் 50 ரூ வரை விற்கப்படுகிறது
இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் இந்த கலப்பட கும்பலுக்கு உணவு ஆய்வாளர்கள் சிலரும் உதவி செய்து வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

 credit ns7,tv