குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறார் குறித்த ஆபாச படங்களை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன், இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா ஒப்புதலுக்காக மக்களவைக்கு அனுப்பப்பட உள்ளது.
credit ns7.tv