ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, தமிழக சட்டசபையில் அமைச்சர் சி வி சண்முகம் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு 4 இடங்களை தேர்வு செய்துள்ளது.
இதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் களமிறங்கியுள்ளனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் 500க்கு மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
credit ns7.tv