மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 23 எம்.பி.பி.எஸ் அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதில் 12 சுயநிதி எம்.பி.பி.எஸ் மருத்துவ கல்லூரிகளில் 69 இடங்கள் காலியாக உள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா அண்ணாமலையார் மருத்துவ கல்லூரியில் 24 இடங்கள்,கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 7இடங்கள்,பெருந்துரை ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 17 இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளது.அரசு பல் மருத்துவ கல்லூரியில் மட்டும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான 16 இடங்கள் காலியாக உள்ளது.இந்நிலையில் இன்று தொடங்கி வரும் 1ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
credit ns7.tv