ரஷ்யாவை குறிவைத்து அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு ரஷ்யாவை குறிவைத்து 6 ரகசிய இடங்களில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக NATOவின் இணை அமைப்பு ஒன்று அண்மையில் அறிக்கை வெளியிட்டு பின்னர் அதனை நீக்கியது.
“A new era for nuclear deterrence? Modernisation, arms control and allied nuclear forces” என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, கனடா எம்.பி Joseph A Day, NATO பாராளுமன்றத்தில் நடைபெறும் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தொடரில் அளிப்பதற்காக தயாரித்ததாகும். அணு ஆயுத குற்றங்களை தடுத்து நிறுத்துவது குறித்த மதிப்பீடாக அந்த அறிக்கை இருந்தது. இந்த நீக்கப்பட்ட அறிக்கையானது கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் பிரதியினை தற்போது பெல்ஜிய நாட்டின் De Morgen பத்திரிக்கை இந்த வாரம் பிரசுரித்துள்ளது. இதில் பெல்ஜியத்தின் Kleine Brogel, ஜெர்மனியின் Büchel, இத்தாலியின் Aviano மற்றும் Ghedi-Torre, நெதர்லாந்தின் Volkel, துருக்கியின் Incirlik ஆகிய 6 ரகசிய இடங்களில் அமெரிக்க அரசு 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யாவிற்கு எதிராக நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலும் B61 ரக thermonuclear gravity குண்டுகள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து NATO சந்தேகம் எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தினை (INF) அமெரிக்கா முறித்துக்கொண்டது. ரஷ்யாவின் புதிய 9M729 ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானது அதனை உடனடியாக ரஷ்யா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும் அந்த ஏவுகனையின் உச்சபட்ச வரம்பு 480 கிமி, இது ஒப்பந்தத்திற்கு உட்பட்டதே என ரஷ்யா பதிலளித்திருந்தது.
credit ns7.tv