வெள்ளி, 19 ஜூலை, 2019

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! July 19, 2019

Image
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கொண்டுவர உத்தேசித்துள்ள மத்திய அரசை கண்டித்தும் தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது

credit ns7.tv

Related Posts: