காஞ்சிபுரத்தில் ஒரே வகையான மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் மீன் விலை குறைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி பல்வேறு மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கே கிடைக்கும் மீன்கள் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இங்கே ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கவல மீன் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது.
மற்ற மீன்கள் கிடைக்காத நிலையில் கவல மீன்கள் மிகவும் குறைந்த விலைக்கே விற்பனை ஆவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
credit ns7.tv