வியாழன், 25 ஜூலை, 2019

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்! July 25, 2019

credit ns7.tv
Image
சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 
 
இக்கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு ( B.V.Sc., AH & B.Tech ) படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன.460 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 8 முதல் ஜூன் 17 வரை நடைபெற்றது. 
 
B.V.Sc., AH படிப்புக்கு 15,666 பேரும், B.Tech படிப்புக்கு 2,772 பேரும் 
விண்ணப்பித்திருந்தனர்.தகுதியான விண்ணப்பங்கள் என்று இறுதி செய்யப்பட்ட 18,438 மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்துடன் அசல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறக்கூடிய கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
முதல் நாளான இன்று காலையில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறவுள்ளது.