தேசிய அளவில் கல்வியில் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக அச்சடிக்கப்பட்டது பற்றி விளக்கம் கேட்டு, 13 பேருக்கு இப்போது நோட்டீஸ் பறந்திருக்கிறது.
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின், பக்கம் எண் 142ல், தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ் மொழி, கிறிஸ்து பிறப்பதற்கு முன், 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக கூறி, தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது, பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, 12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தை வடிவமைத்த 13 பேர் கொண்ட குழுவிடம் விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
credit ns7.tv