தமிழக அரசின் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக விளை நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மருதாடு பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் மடப்பட்டு வரை நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு விஸ்வநாதபுரம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, வெள்ளப்பாக்கம், மருதாடு, குமாரபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களையும் வீடுகளையும் நான்கு வழி சாலைக்காக தமிழக அரசு கையகப்படுத்தும் பனியை துவங்க ஏற்பாடு செய்து வருகின்றது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று குமாரபுரம் பகுதியில் உள்ள மக்கள் குமாரபுரம் தங்களின் வீடு மற்றும் கடைகளில் கருப்புக்கொடி கட்டியும் கிருஷ்ணசாமி கல்லூரி அருகில் இருந்து கையில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் ஆர்பாட்டத்தில் குமாரபுரம் பகுதி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
credit ns7.tv