ns7.tv
பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
➤ 3 மார்ச் 2016 - பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது
➤ 25 மார்ச் 2016 - ஜாதவ் கைது குறித்து இந்திய அரசுக்குத் தகவல் அளித்தது பாகிஸ்தான்
➤ 7 டிசம்பர் 2016 - ஜாதவுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தகவல்
➤ 6 ஜனவரி 2017 - பாகிஸ்தான் விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு குறித்த கோப்புகளை ஐக்கிய நாடுகள் அதிகாரிகளிடம் பாக். சமர்ப்பிப்பு
➤ 10 ஏப்ரல் 2017 - பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்தது
➤ 26 ஏப்ரல் 2017 - ஜாதவிடம் பேசுவதற்கான இந்திய அரசின் கோரிக்கை பாக். அரசால் நிராகரிப்பு
➤ 8 மே 2017 - ஜாதவ் வழக்கு குறித்து இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் முறையீடு
➤ 9 மே 2017 - ஜாதவின் மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்
➤ 15 மே 2017 - ஜாதவ் வழக்கு தொடர்பாக இந்திய,பாகிஸ்தான் அரசுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வாதம்
➤ பிப்ரவரி 2019 - பாகிஸ்தான், இந்தியா என் இரு தரப்பிடமும் சர்வதேச நீதிமன்றம் பொது விசாரணை
➤ 17 ஜூலை 2019 - சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது