வியாழன், 25 ஜூலை, 2019

முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிராக மக்களவையில் குரல் எழுப்பிய திமுக எம்.பி.கனிமொழி..! July 25, 2019

credit ns7.tv
Image
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி., கனிமொழி, முத்தலாக் தடை மசோதா குறுகிய பார்வை கொண்டது எனக் குற்றம்சாட்டினார். 
மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறும் மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் 2.37 மில்லியன் பெண்களில் 0.28 முஸ்லீம் பெண்கள் உள்ள நிலையில், பெரும்பாலான பெண்களை அரசு பாதுகாப்பாக வைத்துள்ளதாக கருகிறதா?. அப்படியென்றால் இந்த மசோதா ஒரு சமூகம், ஒரு மதத்தை மட்டும் குறிவைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். 
இதனால் நாட்டில் சிறுபான்மையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கனிமொழி மக்களவையில் தெரிவித்தார்.