புதன், 24 ஜூலை, 2019

கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில்,

 மத்தியப் பிரதேசத்தில்  அங்கன்வாடி மையத்தின் கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சிவபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், கழிவறையே சமையல் அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மதிய உணவு சமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம், அங்குள்ள ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  News7 Tamil   இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர்  இமார்தி தேவி, கழிவறையில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும், கழிவறை கோப்பைக்கும், சமையல் செய்யும் அடுப்புக்கும் இடையே தடுப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Related Posts: