புதன், 3 ஜூலை, 2019

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மொழிகளில் தமிழுக்கு இடமில்லாததால் சர்ச்சை...! July 03, 2019

Image
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் 6 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கு இடம் இல்லாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இத்தீர்ப்புகள், உச்சநீதிமன்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, மாநில மொழிகளில் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவிட உள்ளதாக உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. 
முதற்கட்டமாக, இந்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒடியா, கன்னடம், தெலுங்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு ஏற்ப, தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழுக்கு இடம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
credit ns7.tv