நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்டெடுக்க, 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், கடந்த மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே, மத்திய அரசிடம் கையேந்தும் நிலைக்கு பி.எஸ்.என்.எல் தள்ளப்பட்டது.
இதையடுத்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, 74 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அதன்படி, முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
credit ns7.tv