சிறு-குறு தொழில்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இடதுசாரி கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறு - குறு தொழில்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட அவர்கள், வரும் பட்ஜெட்டில், இந்த வரியினை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இடதுசாரி எம்.பி-க்கள், டி.கே.ரெங்கராஜன், பி.ஆர். நடராஜன், டி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
credit ns7.tv