செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

101 பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதிக்கு தடை: காத்திருக்கும் சவால்கள்

  20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வரும் வெளிநாட்டு ஆயுத இறக்குமதி செலவீனங்கள் இந்தீயாவின் மூலோபாய உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிந்றைவை அடைய வேண்டும் என்பது பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் முக்கிய குறிக்கோள்களாக இருந்துள்ளது. அதுவும் 1999ம் ஆண்டு கார்கில் போருக்கு பிறகு. இந்தியாவில் “மேக் இன் இந்தியா திட்டம்” 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க வேண்டும் என்பது அதன் குறிக்கோள்களாக இருந்த போதும் அதன் இலக்குகளை அடைய தவறிவிட்டது.

தற்சார்பு இந்தியாவை கருத்தில் கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் இறக்குமதி பட்டியலில் 101 பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளார். இவை தாரளமயமாக்கலுக்கு முன்பு இருந்த நிலைக்கு இது இட்டுச் செல்லும் என்றாலும் கூட தொழில்துறையின் வலுவான பின்னூட்டம் மிகவும் சிக்கலான பாதுகாப்பு தொழில்துறையில் தலையிட அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய ராணுவத்திடம் அர்பணிப்பு குறைவாய் உள்ளது என்பது தான். சில பொருட்களை தடை பட்டியலில் வைப்பதன் மூலமும், உள்நாட்டு உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தனி பட்ஜெட் தலைவரை உருவாக்குவதன் மூலமும், உள்நாட்டு தொழில்துறைக்கு அரசாங்கம் ஒரு சமிக்ஞையை அனுப்பியுள்ளது.

இந்த பட்டியல் பாதுகாப்பு சேவைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ விவகாரத் துறையால் இது இயக்கப்படுகிறது. சேவைகள் தொழில்துறையை கையாண்டால், வாக்குறுதியளித்தபடி, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களுக்கு விரைவாக முன்னேற முடியாமல் போக எந்த காரணமும் இல்லை.

ஆனாலும் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. அடுத்த 5 முதல் 7 வருடங்களில் உள்நாட்டு தொழிலுக்கு ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பது பார்க்க சுவாரசியமான ஒன்றாக இருக்கும். ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் திட்டங்களுக்கு ரூ .3.5 லட்சம் கோடி என்ற அளவில் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டங்கள் யாவும் தற்போது சிக்கல்களில் உள்ளன. தடை செய்யப்பட இருக்கும் 101 பொருட்கள் மிகவும் கவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்காவது, கடற்படைக்கான கார்வெட்டுகள், போர்கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கான multi-barrel rocket launchers இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிப்பு இந்த பொருட்கள் இந்தியாவிலேயே வாங்குவதை உறுதி அளிக்கும். ஆனால் அதில் எந்த ஒரு புதிய வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனை அவை சேர்க்கவில்லை.

அமேதியில் ரஷ்யாவுடன் இணைந்து 7.62 X 39 mm துப்பாக்கிகள் ( AK-203 rifle) ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கூடுதல் விலை காரணமாக அங்கும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சில பொருட்கள் இந்தியாவில் இன்னும் உற்பத்தி மட்டத்தில் உள்ளது. அவை வேறெந்த நாட்டிலும் உருவாக்கப்படவில்லை. லைட் காம்பாட் ஹெலிகாப்டர் மற்றும் லைட் ட்ரான்ஸ்போர்ட் விமானம் ஆகியவை இதில் அடங்கும்.

பட்டியலில் உள்ள உபகரணங்கள் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், மேலும் அடுத்த தலைமுறை ஆயுத அமைப்பு அல்லது தளத்திற்கான எந்தவொரு முக்கியமான அல்லது அதிநவீன தொழில்நுட்பத்தையும் இவை உள்ளடக்குவதில்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்மோஸ் (BrahMos) கப்பல் ஏவுகணை ரஷ்யாவுடன் கூட்டாக தயாரிக்கப்படுகிறது. இதில் ரஷ்யாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல்வேறு ராணுவ உபகரணங்கள் அசெம்பிள் செய்யப்படுகிறதே தவிர இவை அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதில்லை என்பது தான் உண்மை.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு, தொழிற்துறையின் 2 முக்கிய தயக்கங்களை போக்கவில்லை. பொருளாதார ரீதியாக நிலைத்து நிற்கும் அளவிற்கான ஆர்டர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் விலையை காட்டிலும் அதிகப்படியான விலை. 101 பொருட்களுக்கு ஒரு வருடம் இறக்குமதி தடை விதிக்கப்படும். இது வெளிநாட்டு விற்பனையாளர்கள் கோரிக்கை வைப்பதற்கான அச்சத்தை உருவாக்குகிறாது. ஆனால் இந்த நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தி திறனை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவில் கொண்டு செயல்படுவது அரசிற்கும் ராணுவத்திற்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், 1962ம் ஆண்டு போருக்கு சற்று முன்பு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் தான் சுயசார்பு நிரலை அறிமுகம் செய்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.