மத்திய அரசின் தவறான கொள்கையால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைய உள்ளது என இன்ஃபோசிஸ் நிறுவனரான என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறியதை தனது ட்விட்டரில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மோடி இருந்தால், எல்லாம் சாத்தியமாகும்' என்ற பாஜகவின் தேர்தல் முழக்கத்தை நினைவுகூர்ந்து, மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ள ராகுல்காந்தி, இந்தியா இன்னும் பின்னோக்கி செல்லுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.