திங்கள், 24 ஆகஸ்ட், 2020

6 -10ம் வகுப்பு கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கையேடு: சிபிஎஸ்இ வெளியீடு

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், (சிபிஎஸ்இ) Central Square அறக்கட்டளை  ஒத்துழைப்புடன் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் பாடங்களுக்கான Teacher Energised Resource Manuals (TERM) என்ற கையேடுகளை உருவாக்கியுள்ளது.


இந்த கையேட்டில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவும்  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி)  என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் அத்தியாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது . என்.சி.இ.ஆர்.டி தயாரித்த கற்பிக்கும் முறைகளை (The Learning Outcomes (LOs) செயல்படுத்தும் வகையில் ஓவ்வொரு பாடப்பிரிவும் கட்டமைக்கப்பட்டுள்ளன.  மேலும், ஒவ்வொரு பாடப்ப்ரிவிக்கும் கற்றல் குறிக்கோள்களை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம்,  தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு செயல்பாட்டின் மூலம் கற்போரின் முன்னேற்றத்தை மதிப்பிட பல்வேறு புறவய சோதனை வகைகளைத் தயாரிக்க இயலும் என்று சி.பி.எஸ்.இ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அறிவியல், கணிதம் பாடங்களுக்கான வகுப்பு அடிப்படையிலான கையேடுகள் cbseacademic.nic.in இல் கிடைக்கின்றன.

முன்னதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறைகளை மெய்நிகர் நிகழ்ச்சி மூலமாக  வெளியிட்டார்.


இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் , “பணிப் புத்தகங்கள், பணித்தாள்கள் போன்ற கல்வி தொடர்பான சாதனங்களைப் பெறுவதற்கு சமுதாயமும் பள்ளிகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த வழிகாட்டி விதிமுறைகள் வலியுறுத்துகின்றன . இந்தப் பொருள்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களது வீடுகளிலேயே வழங்கப்படுவதற்கு வகை செய்கிறது. சமுதாய மையங்களில் சமூக விலகல் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, தொலைக்காட்சியை உபயோகித்து ஆசிரியர்கள் அல்லது தன்னார்வலர்கள் மூலமாக உள்ளூர் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற ஆலோசனையையும் அது வழங்கியுள்ளது. சமுதாய மையங்களில், சமுதாய உறுப்பினர்கள் பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் உதவியுடன் உதவி தொடர்பு எண் ஒன்றை அமைப்பது குறித்தும் இந்த விதிமுறைகள் ஆலோசனை கூறுகின்றன” என்று தெரிவித்தது.

மாணவர்களுக்கு கல்வி கற்க பெற்றோர்கள் ஆதரவளிப்பது; இதற்காக பெற்றோர்களுக்குப் பயிற்சி அளிப்பது; ஆகியவற்றையும் இந்த விதிமுறைகள் பரிந்துரைத்துள்ளன.