திங்கள், 17 ஆகஸ்ட், 2020

டிசம்பர் வரை பள்ளிகள் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்

டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்,”மத்திய அரசு இதுவரை அத்தகைய முடிவை எடுக்கவில்லை” என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியது.

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கநிலையால், மார்ச் நடுப்பகுதியில் இருந்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன.  உகந்த சூழல் ஏற்பட்டவுடன் சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் கலந்துரையாடி பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர்  ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமீபத்தில் தெரிவித்தார்.

 

அசாம், ஆந்திரா, மேற்கு வங்கம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இருப்பினும்,  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயாராக உள்ளனரா ?  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, இணைய வழிக் கல்வித் தொடர வேண்டும் என்று பெரும்பாலான  பெற்றோர்கள் விரும்புகின்றனர். இருப்பினும், இணைய வழிக் கல்விக்கு சரியான அணுகல் இல்லாத பின்தங்கிய மாணவர்களின் நிலைமை இன்னும் கடினமானதாக உள்ளது.

Government clarifies reports on schools closure till December

 

பள்ளிகள் மீண்டும் செயல்படும் போது, அது தன் ‘இயல்பை’ விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகக்கவசங்கள், சானிடைசர்கள் கட்டயாமக்கப்படும். முன்னதாக , ஆன்லைன் கலந்துரையாடலின் போது, மாற்றியமைக்கப்பட்ட இருக்கை ஏற்பாடுகள்,ஷிபிட் முறையில் பாட வகுப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று போக்ரியால் கூறியிருந்தார்.

 

 

பள்ளிகள், பல கட்டங்களாக திறக்கப்படும். 9 முதல் 12 வகுப்பு பயிலும்  மாணவர்கள் முதலில்  பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 10 வயது வரையிலான 1 முதல் 5 வகுப்பு  மாணவர்கள் தற்போது பள்ளிக்குச் செல்ல எந்தவொரு வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.