கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மேலும் பல நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து , மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டது. 2020 செப்டமபர் 1 முதல் நடைமுறைக்கு வரும், 4-ம் கட்ட தளர்வுகளில், மேலும் பல செயல்பாடுகள் படிப்படியாக மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்:
மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது. இத்தகைய போக்குவரத்துக்கு தனியாக அனுமதியோ, இ-பாசோ பெறத்தேவையில்லை என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது
செப்டம்பர் 7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும். செப்டம்பர் 21ம் தேதி முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, சமூக மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி 100பேர் கலந்து கொள்ளும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும் . செப்டம்பர் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசியத் தேவைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைக்காகவோ தவிர வெளியில் வராமல், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆரோக்கிய சேது கைபேசி செயலி பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.