வியாழன், 13 ஆகஸ்ட், 2020

வாட்ஸ் ஆப் 5 புதிய வசதிகள்: இதில் எதெல்லாம் உங்களுக்கு தேவைன்னு பாருங்க!

 சர்வதேச அளவில் 2 பில்லியனுக்கும் மேல் பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், மாதந்தோறும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளது. சமீபத்தில் அது அறிமுகப்படுத்தியிருந்த அனிமேடட் ஸடிக்கர்கள், கியூஆர் கோட், வாட்ஸ்அப் வெப்பில் டார்க் மோட் உள்ளிட்ட வசதிகள் பயனாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது, வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள சில புதிய வசதிகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.


மல்டி டிவைஸ் சப்போர்ட்

வாட்ஸ்அப் நிறுவனம், மல்டி டிவைஸ் சப்போர்ட் நடவடிக்கையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. மிக விரைவில் இந்த வசதியை பீட்டா வெர்சனில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்ப்பதாக WABetaInfo. ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரே அக்கவுண்டிலாான வாட்ஸ்அப்பை, ஒரேநேரத்தில் பல்வேறு டிவைஸ்களில் பயன்படுத்த இந்த வசதி பேருதவி புரியும். இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு Linked Devices என்று பெயர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Linked Devices வசதியுடன், வாட்ஸ்அப் நிறுவனம், ஹிஸ்ட்ரி சிங்க் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய வசதியால், எப்போதும் வாட்ஸ்அப் இன்டர்நெட் வசதியுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருமுறை, நாம் அனைத்து டிவைஸ்களிலும், சாட் ஹிஸ்ட்ரியை ஷிங்க் செய்துவிட்டால், இன்டர்நெட் இணைப்பு இல்லாத நிலையிலும், ஒரு நோட்டிபிகேசன் வந்தால், அது அனைவரும் பெறலாம்.

Disappearing messages

Snapchat செயலியில் உள்ள Disappearing messages வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், அது தற்போது, வாட்ஸ்அப்பிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ்அப்பில் இனி பார்த்த மெசெஜ்கள் மறையும் வகையில் இந்த வசதி இருக்கும். இந்த புதிய வசதியில், எப்போது மெசேஜ் மறைய வேண்டும் என்று நாமே செட் செய்துகொள்ள முடியும் என்று WABetaInfo செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

In-app web browser

இந்த புதிய வசதியினால், நாம் வாட்ஸ்அப்பில் இருந்தவாறே, பிரவுசரின் உதவியுடன் தேவையான தகவல்களை பெறமுடியும். இந்த வசதிக்கான ஆய்வுகள் தற்போதைய அளவில் ஆல்பா ஸ்டேஜிலேயே உள்ளன. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். இந்த புதிய வசதியினால், நமக்கு பிடித்த ஆர்டிகல், கண்டெண்ட்களை உடனடியாக பகிர ஏதுவாக அமைவதனால் நேர விரயம் தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Storage control

தற்போதைய நிலையில், வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் போனில், ஒரு போல்டர் உருவாகி , அதனுள், போட்டோ, வீடியோ போன்றவைகள் சேகரிக்கப்பட்டு விடும். நாம் தேவையில்லாத போட்டோக்கள், வீடியோக்களை தேர்ந்தெடுத்து அழிக்க வேண்டும். வாட்ஸ்அப், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள புதிய வசதியில், இந்த செயலிக்கு உள்ளேயே மெசேஜ்கள் உள்ளிட்டவைகளை சேமிக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Search on web

WhatsApp’s Search on Web வசதி சில குறிப்பிட்ட நாடுகளில் அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியினால், பொய்ச்செய்திகள் பரப்பப்படுவது தவிர்க்கப்படும். செய்திகளின் நம்பகத்தன்மையை அறிய, வாட்ஸ்அப் செயலியில் உள்ள magnifying glass icon பயன்படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.