திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி 4 தமிழக மருத்துவ மாணவர்கள் பலி

 


தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள வோல்கா நதியில் மூழ்கி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ஒரு யூனனி மருத்துவர் தனது மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவும், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் குடும்ப கனவும் இதனால் சிதைந்தன. அதோடு கடலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களும் இதே சோகத்திற்கு ஆளாகியுள்ளன.

“என் மகனை ஒரு டாக்டராகப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. மிகச் சிறிய வயதிலிருந்தே அவர் ஒரு டாக்டராக விரும்பினார்’’ என்று வருத்தப்பட்ட தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ரஃபி, தனது மகன் முகமது ஆஷிக் இறந்த செய்தியில் அதிர்ச்சியடைந்தார்.

ஆஷிக் உடன், துணை ஆய்வாளர் ஆனந்தின் மகன் மனோஜ் ஆனந்த், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியோர் வோல்காகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள். இவர்கள் நால்வரும் வோல்கா நதியில் மூழ்கி இறந்தனர். “படிப்பை முடித்த ஆறு மாதங்களில் அவர் திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் ரஃபி. விக்னேஷின் உறவினர் சரத் பேசுகையில், ”மருத்துவத்தின் மீதான ஆர்வம் தான் அவரை ரஷ்யாவில் தரையிறக்கியது” என்றார்.

சனிக்கிழமை, மொத்தம் 10 நண்பர்கள், வார இறுதியைக் கழிப்பதற்காக, வோல்கா நதிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் தப்பிக்க முடிந்த நிலையில், திடீர் வெள்ளத்தில் மனோஜ் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக் அதில் உயிரிழந்தனர்.

மனோஜின் தந்தை ஆனந்த் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேலத்தில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, இறந்தவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடல்களைக் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.