தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, போக்குவரத்துக்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தாலும் பள்ளி, திரையரங்கு உள்ளிட்டவைகளுக்கு தடை தொடர்கிறது என அறிவித்துள்ளது. அதன்படி
1. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும்; இணைய வழிக் கல்வி கற்றலை ஊக்குவிக்கலாம்.
2. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு தடை தொடர்கிறது.
3. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
4. மதம் சார்ந்த கூட்டங்கள், சமூதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும்.
5. 75 பணியாட்களுடன் படபிடிப்புக்கு அனுமதி ஆனால் படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
6. மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை.
7. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.