சனி, 15 ஆகஸ்ட், 2020

எதிர்க்கட்சிகள் ஆலோசனை பெறாமல் சட்டம் இயற்றுவதும், திருத்துவதும் ஆபத்தானது: நல்லகண்ணு

 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேசிய கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது , விவசாயத்திற்கு இலவசம் மின்சாரம் ரத்து செய்யும் மின்சார கொள்கை, குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை , சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடு வரைவு உள்ளிட்ட மக்கள் விரோதமானவற்றை ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது

கடந்த 5 மாதங்களில் அரசியல் அமைப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை பெறாமல் இவ்வாறு சட்டங்களை இயற்றவும் திருத்தவும் செய்தது மிகவும் ஆபத்தானது என்றார்.

மாநில சுயாட்சி, கூட்டாட்சி முறைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல்ப்பாடுகளை முறியடிப்போம் என அவர் பேசி